குழந்தைகளும் தொலைக்காட்சியும்

>> Tuesday, January 20, 2009

பெற்றோர்களே! உண்மையில் நீங்கள் உங்கள் குழந்தைகள் மீது அக்கறையுள்ளவர்களா? … படியுங்கள்.

குழந்தையிடம் தொலைக்காட்சியின் ஆதிக்கம் மற்றும் விபரீதம் பற்றிய ஒரு ஆய்வு இந்திய புகழ்பெற்ற பல்கலைகழகத்தில் மேற்கொள்ளப்பட்டது. மிகவும் அதிர்ச்சிகரமான தகவல்களை அது வெளியிட்டுள்ளது.

1. சாதாரணக் குழந்தை பள்ளியில் செலவழிக்கும் நேரத்தைக் காட்டிலும் தொலைக்காட்சியில் அதிக நேரம் செலவழிக்கிறது.

2. சராசரியாக ஒருவாரத்திற்கு 20 மணிநேரம் தொலைகாட்சியில் செலவழிக்கிறது. இது மற்ற எல்லா செயல்களைக் காட்டிலும் அதிகமாகும். (தூங்குவதைத்தவிர).

3. சராசரியாக 70 வயது நிரம்பிய மனிதன் 7 முதல் 10 ஆண்டுகள் வரை நேரத்தை தொலைக்காட்சியில் செலவு செய்கிறான்.

4. விளம்பரங்கள் குழந்தைகளை இலக்காக வைத்து தயாரிக்கப்படுகின்றன. மாதந்தோறும் ஆயிரக்கணக்கான வியாபார விளம்பரங்கள் தயார் செய்யப்படுகின்றன.

5. ஒருவருடத்திற்கு 1000 முதல் 2000 வரையிலான போதை சம்பந்தப்பட்ட விளம்பரங்களை குழந்தைகள் பார்க்கின்றன.


குழந்தைகளின் வாழ்வும் தொலைக்காட்சியும்:

1. தொலைக்காட்சி மூளை வளர்ச்சியை பாதிக்கிறது.

2. பெற்றோர் நினைப்பது போல் குழந்தை நிகழ்ச்சிகள் குழந்தைகளுக்கு பாடம் கற்பிப்பதில்லை. அவை விளம்பர நோக்கத்திற்காகத் தயார் செய்யப்படுகின்றன.

3. தொலைக்காட்சி பார்ப்பது குழந்தைகளின் மற்ற செயல்களை அதாவது விளையாடுவது, பழகுவது, வீட்டுப்; பாடம் படிப்பது, பெற்றோருடன் நேரத்தை செலவிடுவது, சுகாதாரமான காற்றோட்டத்தை சுவாசிப்பது போன்றவற்றை நிர்மூலமாக்குகிறது.

4. குழந்தைகள் தொலைக்காட்சி பார்ப்பதினால் பசியின்மை, தூக்கமின்மை, மந்தபுத்த, சகவாசமின்மை, முரட்டுத்தனம், பார்வைப் பாதிப்பு ஆகிய பின்விளைவுகளைப் பெறுகின்றன.

வன்முறையும் தொலைக்காட்சியும்

1. குழந்தைகளுக்கு தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகளில் ஐந்து முதல் ஆறு மடங்கு பெரியவர்களுக்கு தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகளைக் காட்டிலும் வன்முறை நிகழ்ச்சிகள் காண்பிக்கப்படுகின்றன.

2. சனி, ஞாயிறுகளில் 20 முதல் 25 வரை வன்முறைக்காட்சிகள் காண்பிக்கப்படுகின்றன.

3. 8000 கொலைகளை பள்ளிப்படிப்பை முடிக்குமுன் குழந்தைகள் பார்க்கின்றன.

4. 10,000 கற்பழிப்புகள், அடிதடிகள், கொலைகள் ஓவ்வொருவருடமும் பார்க்கின்றன.அவற்றைப் பார்த்தது போல் வன்முறையில் ஈடுபட முனைகின்றன.

5. பள்ளியில் சேருமுனனரே (Aduls) பார்க்கும் நிகழ்ச்சிகள் குழந்தைகளை மிகவும் பாதிக்கின்றன.

6. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மிகக் கெட்ட நடத்தைகளை வளர்க்கின்றன.

7. நினைப்பதை அடைய வன்முறை தான் தீர்வு என்று காண்பிக்கப்படுகின்றன.

8. நிறைய நிகழ்ச்சிகள் வன்முறை நிகழ்ச்சிகளுக்கு தண்டனையில்லாமல் காண்பிக்கப்படுகின்றன அவை கேலிக்குரியதாகவும் காண்பிக்கப்டுகின்றன.

9. நல்வர்கள் கெட்டவர்களை அடிப்பது நல்லது போலவும் அது சாதாரணமானது போலவும் சித்தரிக்கப்படுகிறது. விளையாட்டுகளில் இது போன்று நிரூபிக்க குழந்தைகள் முயலுகின்றன.

10. தொலைக்காட்சியில் வரும் (Fast food )உணவு ,இனிப்பு பதார்த்தங்களில் மட்டுமே ஆரோக்யமும் சத்தும் இருப்பது போல் குழந்தைகள் நினைக்கின்றன. ஆனால், உண்மையில் அவ்வாறில்லை.

தொலைக்காட்சி பார்க்கும் நேரங்களை எப்படித் தீர்மானிப்பது ?:

1. எந்த நேரத்தில் பார்க்க அனுமதிப்பது? எந்த நேரத்தில் அனுமதிக்க கூடாது என்று வரையரை செய்யுங்கள். அதாவது வீட்டுப் பாடம் படிக்கும் முன் , எழுதும் நேரத்திற்கு முன,. சாப்பிடும் நேரம், பெற்றோர் அருகாமையில் இல்லாத நேரம் ஆகியவற்றில் கண்டிப்பாய் அனுமதிக்கக்கூடாது.

2. ஒரு நாளைக்கு ஒன்று அல்லது அதிக பட்சம் இரண்டு மணி நேரத்திற்கு மேல் அனுமதிக்கக்கூடாது.

3. பள்ளி நாட்களில் இரவில் ஒரு மணிநேரமும், வார நாட்களில் 3 மணிநேரமும் அனுமதிக்கலாம்.

4. அறிவுப்பூர்வமான நிகழ்ச்சிகளை சில நேரங்கள் அதிகமாக அனுமதிக்கலாம்.

5. படிப்பில் குறைவாக உள்ள குழந்தைகளை ஒரு நாளைக்கு அரை மணிநேரம் மட்டுமே அனுமதிக்கவேண்டும் அல்லது முற்றிலும் தவிர்க்கலாம். வார நாட்களில் 2 மணிநேரம் அனுமதிக்கலாம்.

6. வீட்டுப் பாடம் (Home work) இருக்கும் போது கண்டிப்பாய் டிவி பார்க்க அனுமதிக்காதீர்கள். குழந்தையின் விரும்பிய நிகழ்ச்சியாயிருப்பின் பதிவு செய்து பிறகு காண்பிக்கலாம்.

7. வார நாட்களில் டிவியை உபயோகிக்காமல் இருப்பதும் வார இறுதி நாட்களில் குறிப்பிட்ட அளவு பார்ப்பதும் மிகவும் நன்று. இது வீட்டுப் பாடம் படிக்க வேகப்படுத்துவதை தடுக்கும். குடும்பத்திலுள்ளவர்களுடன் உறவாட உதவும். டிவிமுன் நிறுத்திவிட்டு சமையல் செய்வதைக்காட்டிலும் சமையலுக்கு உதவ குழந்தையைத் தூண்டவேண்டும்.
இந்தியாவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பெண்களை கீழ்த்தரமாகவும், கொச்சைப் படுத்தியும் டிவி தொடர்கள் காண்பிக்கப்படுகின்றன என்று கூறுகிறது.


‘குழலினிது யாழினிது என்பர் தம் மக்கள் (குழந்தைகளின்) மழலைச் சொல் கேளாதார்’
என்கிறார் வள்ளுவர்.
வருடக்கணக்கில் டிவி தொடர்கள் பார்ப்பதை விடுத்து குழந்தையுடன் கொஞ்சி விளையாடுங்கள்
தொலைக்காட்சிகளில் பொழுதைக் கழித்து குழந்தைகளின் பாசத்தை இழந்து விடாதீர்கள்!

31 சொன்ன கருத்துக்கள்:

நட்புடன் ஜமால் January 20, 2009 at 4:56 PM  

தொ(ல்)லை காட்சி ...

தமிழ் தோழி January 20, 2009 at 5:03 PM  

// நட்புடன் ஜமால் கூறியது...
தொ(ல்)லை காட்சி ...//

ஆமாம் நீங்கள் சொல்லுவது போல்
தொலைக்காட்சி தொல்லை காட்சியாக
உள்ளது.

புதியவன் January 20, 2009 at 5:06 PM  

மிக அருமையான அனைவரும் படித்துப்
பயன் பெற வேண்டியா பதிவு...
வாழ்த்துக்கள் தமிழ் தோழி...

அ.மு.செய்யது January 20, 2009 at 5:10 PM  

பயனுள்ள செய்திகளைத் தொகுத்து எழுதியிருக்கிறீர்கள்..

அருமையான பதிவு தமிழ்தோழி..பெற்றோர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டும்.

தமிழ் தோழி January 20, 2009 at 5:12 PM  

//புதியவன் கூறியது...
மிக அருமையான அனைவரும் படித்துப்
பயன் பெற வேண்டியா பதிவு...
வாழ்த்துக்கள் தமிழ் தோழி...//


உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி புதியவரே.

நட்புடன் ஜமால் January 20, 2009 at 5:13 PM  

\\பெற்றோர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டும்.\\

பெற்றோர்களும் கண்டிக்கப்படவேண்டும்

அ.மு.செய்யது January 20, 2009 at 5:14 PM  

//ஒரு நாளைக்கு ஒன்று அல்லது அதிக பட்சம் இரண்டு மணி நேரத்திற்கு மேல் அனுமதிக்கக்கூடாது.//

//வீட்டுப் பாடம் (Home work) இருக்கும் போது கண்டிப்பாய் டிவி பார்க்க அனுமதிக்காதீர்கள். குழந்தையின் விரும்பிய நிகழ்ச்சியாயிருப்பின் பதிவு செய்து பிறகு காண்பிக்கலாம். //

நல்ல யோசனை தான்...
ஆனா இவங்க மெகாசீரியல் பாத்துட்டு கண்ணீரும் கம்பலையுமா நிக்கும்போது
இதல்லாம் தமிழ்தோழி சொன்னாங்களேனு ஞாபகம் வருமா ??

தமிழ் தோழி January 20, 2009 at 5:14 PM  

///அ.மு.செய்யது கூறியது...
பயனுள்ள செய்திகளைத் தொகுத்து எழுதியிருக்கிறீர்கள்..

அருமையான பதிவு தமிழ்தோழி..பெற்றோர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டும்.///

நீங்கள் வந்து கருத்து தந்தமைக்கு
நன்றி செய்யது அண்ணா.

அமுதா January 20, 2009 at 5:16 PM  

நல்ல பதிவு

தமிழ் தோழி January 20, 2009 at 5:18 PM  

//அமுதா கூறியது...
நல்ல பதிவு///

நன்றி அமுதா.

தமிழ் தோழி January 20, 2009 at 5:20 PM  

///அ.மு.செய்யது கூறியது...
//ஒரு நாளைக்கு ஒன்று அல்லது அதிக பட்சம் இரண்டு மணி நேரத்திற்கு மேல் அனுமதிக்கக்கூடாது.//

//வீட்டுப் பாடம் (Home work) இருக்கும் போது கண்டிப்பாய் டிவி பார்க்க அனுமதிக்காதீர்கள். குழந்தையின் விரும்பிய நிகழ்ச்சியாயிருப்பின் பதிவு செய்து பிறகு காண்பிக்கலாம். //

நல்ல யோசனை தான்...
ஆனா இவங்க மெகாசீரியல் பாத்துட்டு கண்ணீரும் கம்பலையுமா நிக்கும்போது
இதல்லாம் தமிழ்தோழி சொன்னாங்களேனு ஞாபகம் வருமா ??///

நீங்கள் சொல்லுவதும் சரி தான்.

இது போதாதென்று அரசாங்கம் இலவசமாக தொலைக்காட்சியை கொடுக்கிரது.

தமிழ் தோழி January 20, 2009 at 5:21 PM  

///நட்புடன் ஜமால் கூறியது...
\\பெற்றோர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டும்.\\

பெற்றோர்களும் கண்டிக்கப்படவேண்டும்
///

ஆமாம் நன்பரே.

pudugaithendral January 20, 2009 at 6:30 PM  

அருமையான கருத்துக்கள், அலசல்கள்.

தாங்கள் விரும்பினால் இந்தப் பதிவை பேரண்ட்ஸ்கிளப்பில் வலைப்பூவிலும் ஏற்றலாம்.

பலருக்கும் உபயோகமாக இருக்கும்.

வால்பையன் January 21, 2009 at 12:54 AM  

ஓரளவு வசதி படைத்தவர்கள், தொலைக்காட்சிக்காக தனி அறையை ஒதுக்குவது நல்லது.

பார்வை நேரம் குறையும்

priyamudanprabu January 22, 2009 at 7:24 AM  

நல்ல பதிவு
குழந்தைகள் பார்ப்பது இருக்கட்டும் பெற்றோர்களை என்னசெய்வது

butterfly Surya January 22, 2009 at 5:44 PM  

நல்ல பகிர்வு தோழி. வாழ்த்துக்கள்.

It is a very serious issue.

கதை புத்த கங்களை படிக்கும் ஆர்வம் மிகுதியாக இல்லாத இந்தியாவில் குழந்தைகளுக்கு என்று திரைப்படமே இல்லை என்பது மிகுந்த வேதனையான விஷயம். அதனால் தான் குழந்தைகளுக்கு மன அழுத்தமும் வீணான சிந்தனக்களும் வருகிறது என்பது உளவியலாளர்கள் கருத்து.

தமிழகத்தில் எல்லா குழந்தைகளும் அழுது வடியும் சீரியல்களையும் சினிமா, போட்டிகள் என்ற பெயரில் ஆபாச நடனங்களையும் அருவருக்கதக்க நிகழ்வுகளையும்
நடு ஹாலில் உட்கார்ந்து மணிகணக்கில் பார்ப்பது என்பது கொடுமையிலும் கொடுமை.

ஒரு காட்சியை காண்பிப்பதற்கு பதில், படிப்பவர் கற்பனைக்கு விட்டு விட்டால் தான் குழந்தைகளின் எண்ணத்தில் அதை பற்றிய காட்சி விரியும் creativity யும் வளரும்” வாய்ப்புகள் அதிகம்.

நான் சிறு வயதில் படித்து என்னை மெருகேற்றிய அம்புலிமாமா , பாலமித்ரா, தெனாலி ராமன் கதைகள், முத்து, ராணி மற்றும் லயன் காமிக்ஸ்” போன்ற புத்தகங்கள் இந்த தலைமுறைக்கு அன்னியமாக வே இருக்கிறது.

டிவி பார்பதை அவவளவு சீக்கிரம் நிறுத்த இயலூமா..???
தோன்றவில்லை. குறைக்கலாம். படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த முயற்ச்சி எடுக்கலாம்.

ஆனால் தேவையோ இல்லையோ, நுகர்வு கலாசாரத்தில் சிக்கி உழன்று தம்பதிகள் இருவரும் வேலைக்கு செல்லுதல், பெற்றோரை புறக்கணித்த
Nucleus குடும்பங்கள், அக்கம் பக்கம் தெரியாத அடுக்குமாடி குடியிருப்புகள் etc., etc., என பெற்றோர் செய்கின்ற கொடுமையையும் யாரிடம் போய் சொல்ல என்று ஒரு குழந்தை கேட்கின்ற கேள்வி உங்கள் செவிக்கு கேட்கவில்லையா..???

என்னத்த சொல்ல..??

தேவன் மாயம் January 23, 2009 at 4:05 PM  

அனைவரும் பின்பற்ற
வேண்டிய
விஷயம்..


என் ப்ளாகில் அறிவியல்
பதிவு உங்கள் கருத்துரைக்காக
காத்திருக்கிறது..
தேவா..

ஹேமா January 23, 2009 at 8:34 PM  

தமிழ் தோழி மிகமிகப் பிரயோசனமான செய்தி.
பெற்றோர்களின் காதுகளில் இந்தச் செய்திகள் விழுமா?அவர்களே தொலைக்காட்சிக்குள் நுழைந்து கிடக்கிறார்கள்.பிறகு எப்படி பிள்ளைகளைத் திருத்துவது.உங்கள் சமூக அக்கறைக்குப் பாராட்டுக்கள் தோழி.யாராவது ஒருவராவது பயனடைந்தால் நல்லதே.

சுகம்தானே தோழி.எங்கள் வீட்டுப் பக்கமும் வரலாம் தானே!

எம்.எம்.அப்துல்லா January 23, 2009 at 9:22 PM  

// நட்புடன் ஜமால் கூறியது...
தொ(ல்)லை காட்சி ...

//

ரிப்பிட்டு...

எம்.எம்.அப்துல்லா January 23, 2009 at 9:23 PM  

புது டெம்ப்ளட் மாத்திருக்கீங்க போல. ரொம்ப நல்லா இருக்கு :)

RAMYA January 24, 2009 at 8:22 PM  

அருமையான் கருத்துங்க
எல்லா பெற்றோர்களும்
படிப்பதோடு மட்டுமில்லாமல்
சிந்திக்கணும் அதெ செயல்படுத்தனும்

RAMYA January 24, 2009 at 8:24 PM  

//
வால்பையன் கூறியது...
ஓரளவு வசதி படைத்தவர்கள், தொலைக்காட்சிக்காக தனி அறையை ஒதுக்குவது நல்லது.

பார்வை நேரம் குறையும்

//

வால் பையன் கூறி
இருப்பதும் அருமையான
கருத்து தமிழ் தோழி
நல்ல சிந்தனை.

நடைமுறை படுத்தினால்
நல்லாத்தான் இருக்கும்

அப்துல்மாலிக் January 25, 2009 at 10:00 PM  

இப்போதைக்கு தேவையான பதிவுங்க..
இருந்தாலும் என்ன செய்வது குழந்தைங்களுக்கு அதுவும் தேவைப்படுதே..

VASAVAN January 26, 2009 at 1:15 PM  

உங்களுக்கும் அனைவருக்கும் இந்திய குடியரசு தின வாழ்த்துக்கள்.

சந்தனமுல்லை January 29, 2009 at 4:43 PM  

அருமையான பதிவு..தமிழ்தோழி! நல்ல பயனுள்ள விஷயங்களை எழுதியிருக்கீங்க!! அதுக்கே உங்களுக்கு சபாஷ்!

ராம்.CM February 8, 2009 at 10:47 PM  

அருமையான அனைவரும் படித்துப்
பயன் பெற வேண்டிய பதிவு...
வாழ்த்துக்கள் தமிழ் தோழி...

anna February 16, 2009 at 2:19 PM  

தமிழ் சமையல்
Profiles Planet
Residence Collection
Dotnet Best
Chronicle Time
Cingara Chennai
Free Crackers

எம்.எம்.அப்துல்லா February 21, 2009 at 9:39 AM  

என்னாச்சு சகோதரி??? ரொம்பநாளா உங்களைக் கானோம்???

A N A N T H E N February 21, 2009 at 2:25 PM  

நல்ல ஆய்வு பகிர்வு, நன்றி

Thamiz Priyan February 28, 2009 at 1:29 AM  

என்னங்க.. இணையத்தில் காண முடியல... தொடர்ந்து எழுதுங்க

Unknown March 4, 2009 at 2:11 AM  

உங்களின் வலைப்பூ அருமை! தமிழில் தமிழர் படிக்க ஏதுவாக இருக்க உங்களின் முயற்சி பாராட்டுக்குறியது.
www.TamilKudumbam.com வந்து உங்களின் படைப்புகளை மேலும் பலர் அறிய செய்யுங்கள். -நன்றி